தமிழகத்திற்கு நிம்மதியான செய்தியை சொன்ன அமைச்சர் விஜயபாஸ்கர்!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையானது 23 ஆக உள்ளது. இதில் இன்று ஒருவர் குணமாகியுள்ளார் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக இன்று மட்டும் புதியதாக 5 பேர்  கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்து இருந்தார். இவர்களில் 4 பேர் இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் மற்றும் அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக இருந்த சென்னையை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவித்து இருந்தார்.  

இந்த நிலையில் சில நாட்களுக்கு பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை 23 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது நபராக பாதிக்கப்பட்ட டெல்லியில் இருந்து வந்த இளைஞர் தற்பொழுது சிகிச்சையின் பலன் அளித்து மீண்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் இருந்து வந்த இளைஞர் சென்னையில் வேலை தேடி அலைந்தவர் கொரோனா தொற்று  இருப்பது உறுதியானது. அவர் தற்போது ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவர் சிகிச்சை மூலம் மீண்டுவந்து உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவருக்கு எடுக்கப்பட்ட சோதனைகளில் இரண்டு தடவையும் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. இதனையடுத்து  அவர் இன்னும் இரண்டு நாட்களில் வீட்டுக்கு அனுப்பப்படுவார் என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஓமனில் இருந்து வந்த முதல் நோயாளியும் சிகிச்சைக்கு பின் மீண்டும் வீட்டிற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

second patient recovering from corona


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->