துரத்திய யானை கூட்டம்.. பதறிப்போன பெற்றோர்கள்.. வனத்துறை அதிரடி.!! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பள்ளி மாணவர்களை யானை கூட்டம் ஒன்று துரத்தியது. இதனால் துரப்பள்ளி காரைக்குடி ஆகிய பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

குடியிருப்பு பகுதிகளில் புகும் காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பெற்றோர்களும் பொதுமக்களும்‌ முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் வனத்துறை வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டனர். தொரப்பள்ளி, கார்குடியில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு வனத்துறை வாகனத்தில் செல்லும் மாணவர்கள் அனைத்து செல்லப்பட்டதோடு யானைகள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை உத்தரவாதம் அளித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School students dropped in forest dept vehicle


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->