அமைச்சர் பெரியசாமிக்கு எதிரான வழக்கு.. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டு வசதி வாரியம் மூலம் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளருக்கு வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கிழமை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அந்த வழக்கிலிருந்து திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டார்.

இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமைச்சர் பெரியசாமி விடுவிக்கப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கண்டார். 

இதற்கு தடை விதிக்க கோரி அமைச்சர் பெரியசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுத்ததோடு வரும் ஜூலை மாதத்திற்குள் விசாரணை நிறைவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்து அமைச்சர் ஐ பெரியசாமி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கை ஜூலை மாதத்திற்குள் விசாரணை நிறைவு செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், வழக்கின் விசாரணையின் போது நேரில் ஆராய்ச்சல் ஆகுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். 

இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சர் ஐ பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி வாரியம் முறைகேடு வழக்கை ஜூலை மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sc interm stay on minister periyasamy case Madrashc verdict


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->