சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்... வசமாக சிக்கிய காவல் துறையினர்.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் ஆனது, பல தரப்பிலிருந்தும் காவல்துறைக்கு கண்டனங்களை பெற்று வருகிறது. தந்தை, மகனின் மரணத்திற்கு பல தரப்பில் இருந்து நீதி கேட்டு போராட்டங்கள் மற்றும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் அடுத்தடுத்து வலுத்து வந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக முதல்வர் அறிவித்து இருந்தார். 

இந்நிலையில், ஜெயராஜ், பெனிக்ஸ் உடலில் அதிக காயங்கள் இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

முதல் நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்த மூவர் தரப்பிலும் தனித்தனியே வழக்கறிஞர்களை நியமித்து, 4 வாரத்தில் விளக்கமளிக்க நிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போது போலீசார் மிரட்டல் என மாஜிஸ்திரேட் புகார் தெரிவித்துள்ளார். ஆகையால் குற்றவியல் அவமதிப்பு வழக்கு பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவின் படி தூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன், ஏ.டி.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன் ஆகியோரி விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபினபுவும் ஆஜராகி உள்ளார்.

மன அழுத்தம் காரணமாக காவலர்கள் நடந்து கொண்டிருக்கலாம் என காவல்துறை தரப்பு நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளனர். ஒரு சிலரின் நடவடிக்கைகளால் இது போன்ற பிம்பம் ஏற்பட்டுவிடுகிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சி.பி.ஐ. விசாரணைக்கு முன்பு தடயங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது  என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sathankulam murder case investigation


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->