புலியை எரித்ததாக புகைபோட்ட டிக் டாக் காமெடியன்கள்... வசமாக வச்சி செய்த காவல்துறை, வனத்துறை.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், தமிழகத்திலும் ஊரடங்கு மிகக் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. வீட்டில் இருக்க முடியாத நபர்கள் வெளியே போலியான காரணங்களை கூறி சுற்றி வந்த நிலையில், காவல் துறையின் கெடுபிடி காரணமாக இதுவும் தவிர்க்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் இளைஞர்கள் அங்குள்ள மலைப்பகுதிக்கு சென்று, புலியை எரித்துள்ளதாக கூறி வீடியோ பதிவிட்டு செய்து சிக்கியுள்ளது அம்பலமாகியுள்ளது. 

தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் மைம்பாறை பகுதியைச் சார்ந்த மலை இடுக்கில் புலி இருப்பதாகவும், இதனை தீ வைத்து எரித்து விட்டதாக கூறி நாலுபேர் வீடியோ பதிவு செய்து டிக்டாக்கில் வெளியிட்டுள்ளனர். 

இந்த வீடியோ காட்சியானது பெரும் வைரலாகவே, இது குறித்த விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த விசாரணைக்கு பின்னர் வீடியோவை வெளியிட்டதாக கூறி அப்பகுதியை சார்ந்த கடல்புறா நாகராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்துள்ளனர். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்த நிலையில், இவர்கள் டிக் டாக் விடியோவுக்காக அப்பகுதியில் உள்ள சிறிய மலைக்கு சென்று புகைபோட்டு வந்ததும், டிக் டாக்கில் புலியை எரித்ததாக கூறியதும் தெரியவந்துள்ளது.  

இதனையடுத்து காட்டுக்கு தீ வைத்த காரணத்திற்காக 4 பேருக்கும் தலா 30 ஆயிரம் வீதம், ஒரு இலட்சத்து 20 ஆயிரம் அபராதமாக விதித்துள்ளனர். இவர்களை வைத்தே வனவிலங்குகளை அளிப்பது கொடூரமான செயல், வனத்தை பாதுகாக்க வேண்டும் என்று பேச சொல்லி வீடியோவை பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sankarankovil tic tok users arrest by police and forest dept


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->