அதிமுக சார்பில் சமத்துவ பொங்கல்..MLA குடும்பத்துடன் பங்கேற்பு!   - Seithipunal
Seithipunal


புதுச்சேரி முதலியார் பேட்டை தொகுதி அதிமுக சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், நமது மக்கள் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு A.பாஸ்கர் அவர்கள் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினார்

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுவருகிறது.அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி முதலியார் பேட்டை தொகுதி அதிமுக சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், நமது மக்கள் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு A.பாஸ்கர் அவர்கள் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினார்.விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அதிமுக மாநில அம்மா பேரவை செயலாளரும், நமது மக்கள் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு A.பாஸ்கர்  மற்றும் அவரது துணைவியார் கன்னிய செல்வி பாஸ்கர்,மகள் ஸ்ரீமதி ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கி வைத்து சிறப்பித்தனர். 

இதில் முதலியார்பேட்டை தொகுதியை சார்ந்த 500கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். விழாவில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் நமது மக்கள் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு A.பாஸ்கர் அவர்கள்  பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் முதலியார் பேட்டை தொகுதி அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

 Samathuva Pongal on behalf of AIADMK Participation with the MLA family


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->