குடும்பத்தின் வறுமையை போக்க வண்ணப்பட்டங்கள்..! சேலம் சிறுவன் ஸ்ரீகாந்த் நெகிழ்ச்சி செயல்.!! - Seithipunal
Seithipunal


ஸ்ரீகாந்த் என்ற 13 வயது சிறுவன் குடும்ப வறுமையை குறைக்க வண்ணங்கள் கொண்ட பட்டங்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். 

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பொதுமுடக்கம் காரணமாக உலக நாடுகளே பொருளாதார பிரச்சனையில் சிக்கித்தவித்து வரும் நிலையில், அன்றாடம் வேலை செய்து தினக்கூலியில் குடும்பம் நடத்தி வந்த பல குடும்பங்களின் நிலை பெரும் கவலைக்கிடமாக சென்றுள்ளது. 

தமிழகத்தை பொறுத்த வரையில் 2 ஆவது கொரோனா அலையின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு இருந்தாலும், பல குடும்பங்கள் பெரும் சிரமத்தை தொடர்ந்து சந்தித்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் சீரங்கனூர் பகுதியை சார்ந்தவர் கோவிந்தன். 

இவரது இளையமகன் ஸ்ரீகாந்த் (வயது 13). சிறுவன் ஸ்ரீகாந்த் தனது வீட்டிற்கு அருகேயுள்ள நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், தனது குடும்பத்தின் வறுமையை உணர்ந்த ஸ்ரீகாந்த், காலை மற்றும் அறிவாற்றல் திறனை கொண்டு பல வடிவங்களில் பல்வேறு வண்ணத்தில் பட்டன்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். 

தான் பயின்று வரும் பள்ளியின் வாயில்கள் மூடப்பட்டு இருக்கும் நிலையில், பள்ளியின் வாயிலில் தந்து பட்டத்தை கட்டி விற்பனை செய்து வருகிறார். இதனை அப்பகுதி வாசிகள் வாங்கி வருவதால், சிறுவனுக்கு ஓரளவு வருமானம் கிடைத்து இருக்கிறது. 

  • சிறுவனின் எதிர்காலம் வண்ணங்களால் சூழ்ந்து அனைவரும் பெருமைப்படும் வகையில் அமைய வாழ்த்துக்கள்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Child Srikanth Sales Kite by Own Creation to Reduce Family Economical status


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->