கத்தியை காட்டி மருத்துவச்சியிடம் நகையை பிடுங்கிய திருடர்கள்!! அதிர்ச்சியில் மருத்துவச்சிக்கு நேர்ந்த பரிதாபம்!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் சிறுமலைப்பிரிவு வாழைக்காய்பட்டியில், கணவரை பிரிந்த மீனாள் ( 65) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கிளினிக் வைத்து நடத்தி வரும் இவர் தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இன்று காலை மீனாள் தனது வீட்டின் முன் நின்றிருந்த சமயத்தில் இருவர் காரில் இருந்து இறங்கி வந்து கத்தியை காட்டி மிரட்டி வீட்டுக்குள் விரட்டினர். பின் மீனாள் கழுத்தில் அணிந்தருந்த தங்க சங்கிலியை பறித்து கொண்டனர்.

ஒருவர் அவரை மிரட்டி கொண்டிருக்கும் போதே மற்றொரு திருடன் பீரோவை உடைத்து ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொள்ள பின் இருவரும் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து திண்டுக்கல் போலீஸ் நிலையத்தில் மீனாள் புகார் அளித்தார். 

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் செழியன், வேலுமணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அருகில் இருந்த வீட்டினரிடம் விசாரணை நடத்தியதில் காரில் 4 பேர் வந்ததாவும், அதில் 2 பேர் மட்டும் சென்று கொள்ளையடித்ததாகவும் தெரிய வந்துள்ளது. அதிகாலையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

robbering in doctor house


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal