லாரியில் மணல் திருடி பார்த்து இருப்பீங்க, ஆனால் இப்படிபட்ட மணல் திருட்டை பார்த்து இருக்கீங்களா? - Seithipunal
Seithipunal



காவிரி ஆற்றில் நூதன முறையில் அரங்கேறும் மணல் கொள்ளை.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்தது இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கும் குடிநீருக்கு மட்டும் குறைந்த அளவு நீரே திறக்கப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதற்கு தடை அமலில் உள்ள நிலையில். ஆனால் ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த அம்மாபேட்டை காடப்பநல்லூர் பகுதியில் சிலர் பரிசலில் ஆற்று பகுதியின் நடுவே சென்று, தண்ணீரில் மூழ்கி வாளியில் மூலமாக மணலை அள்ளி பரிசலில் நிரப்பி கரைக்கு கொண்டு வருகின்றனர். 

கரைக்கு கொண்டு வரும் மணலை அங்கேயே சலித்து, வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்புவதாகக் தெரிகிறது. பகலிலையே நடைபெற்று வரும் இந்த மணல் கொள்ளை குறித்து பவானி வட்டாட்சியர் கூறியதாவது, ஆற்றில் மணல் அள்ள யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை என்றும், சம்மந்தப்பட்ட ஆற்று பகுதிக்கு அதிகாரிகளை அனுப்பி உடனடியாக ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

river sand theft


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->