நிவாரண பொருட்களை இலவசமாக அனுப்பலாம் - தமிழக அரசு அதிரடி.! - Seithipunal
Seithipunal


வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 16ம் தேதி முதல் அதிகனமழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். 

அதிலும் குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. தற்போது, வெள்ள நீர் வடிந்து வந்தாலும் மக்கள் பாதிப்புகளில் இருந்து இன்னும் மீளவில்லை. இதற்கிடையே, தமிழக அரசு மழை குறைந்ததால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. 

இதற்கிடையே, தென் மாவட்டங்களில் அமைச்சர்கள் மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த நிவாரணப் பொருட்களை ஒருங்கிணைப்பதற்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நிவாரணம் அளிக்க விரும்புவோர் அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அப்படி நிவாரணம் அளிக்க விரும்புவோர், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் விரைவுப் பேருந்துகள் உள்பட அனைத்து அரசுப் பேருந்துகளிலும் நிவாரணப் பொருட்களை இலவசமாக அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

relief items send free cost in government bus


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->