வாக்கு பதிவு குறைய காரணம்? மாநகராட்சி ஆணையர் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


சென்னையில் 3 நாடாளுமன்ற தொகுதிகளையும் சேர்ந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்ட்ராங் ரூமில் வைக்கும் பணி நடைபெற்றது. இதனை சென்னை மாநகராட்சி ஆணையர் தேர்தல் நடத்தும் அலுவலருமான ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், லயோலா கல்லூரியில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ரூமில் 156 கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட உள்ளோம். 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ரூமிற்குள் செல்வதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு குறைந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு அவர், தேர்தல் ஆணையம் சார்பில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். 

ஆனால் நகர்ப்புறத்தில் உள்ள மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் தான் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Reason for decrease vote


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->