#Breaking: திமுக பொதுச்செயலாளர், பொருளாளருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து..!! - Seithipunal
Seithipunal


திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் பதவிவகித்து வந்த துரைமுருகன், இன்று பொதுச்செயலாளர் போட்டியில் எதிர்வேட்பாளர் இல்லாமல் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைப்போன்று டி.ஆர் பாலுவும் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இவர்கள் இருவரின் வெற்றிக்கு கழகத்தினரும், கூட்டணி கட்சியினரும் பலத்த வரவேற்பு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகனும் எனக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைத்துள்ளது பயம் கலந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தெரிவித்தார். இறுதியில் கலகலப்பாக பேசியிருந்தார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கத்தில், " தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் " என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth greetings to Durai Murugan and TR Balu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->