அதிமுகவுடன் கைகோர்க்கிறாரா அழகிரி.?! அமைச்சர் வெளியிட்ட தகவல்., ஸ்டாலின் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து பகுதிக்கும் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது அம்மாவின் ஆட்சியில் தான். விருதுநகர் மருத்துவ கல்லூரியை ஸ்டாலின் திமுக தான் கொண்டு வந்தது என்று கூறுகிறார். அவர் ஒரு லூசு. பத்து வருடங்களாக அம்மாவின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. பத்து வருடங்களாக அமைச்சராக நான் இருக்கிறேன். 

மருத்துவ கல்லூரியும், அரசு கல்லூரியையும் கொண்டுவந்தது முதல்வரும், துணை முதல்வரும் தான். இந்த தொகுதிக்கு எதை கேட்டாலும் உடனே செய்பவர் முதல்வர் எடப்பாடி. ஜனவரியில் மருத்துவக் கல்லூரியை அவர் திறந்து வைக்கப் போகிறார். யாரோ பெற்ற பிள்ளைக்கு தான்தான் அப்பன் என்று ஸ்டாலின் கூறுவது அசிங்கமாக இருக்கிறது. ஸ்டாலின் உளறுகிறார். 

மருத்துவ கல்லூரியில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு பள்ளி மாணவர்களுக்கு பெற்றுத்தர சட்டம் இயற்றியது எடப்பாடி தான். ஆனால், தான் பெற்று தந்ததைப் போல ஸ்டாலின் பேசுகிறார். கோரிக்கை கூட வைக்காமல் ஸ்டாலின் வாயை மூடிக் கொண்டு இருந்துவிட்டு தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். அவர் பேசுவது எல்லாமே பொய். ஸ்டாலினை பழிவாங்க முக அழகிரி கிளம்பிவிட்டார். 

திமுக குடும்ப சொத்தில் அவருக்கு பங்கு கொடுக்கவில்லை. இது குறித்து காவல்துறையிடம் புகார் கொடுத்தால் நாங்கள் உடனே நடவடிக்கை எடுப்போம். நியாயமாக பேசி அண்ணா அறிவாலயத்தில் ஒரு பக்க வாசல் முக அழகிரிக்கு கொடுக்கும் வகையில் பிரித்துக் கொடுப்போம். குடும்பத்தில் உள்ள ஒரு லட்சம் கோடி சொத்தை அனைவருக்கும் பிரித்துக் கொடுத்து விடுவோம். 'என்று கூறியுள்ளார். 

சொத்துக்களை கைப்பற்ற அதிமுகவின் ஆதரவை முக அழகிரி நாடுவாரா? என்ற எதிர்பார்ப்பு தற்போது கிளம்பியுள்ளது. மேலும், அழகிரியின் ஆதரவு ஓட்டுக்கள் தங்களுக்கு கிடைக்க ராஜேந்திரபாலாஜி காய் நகர்த்துகிறார் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajenthirabalaji speech about alagiri and Stalin


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->