புதிய தமிழகம் கட்சி பிரமுகர் கொலை விவகாரம்.. மக்கள் திடீர் போராட்டம்.. இராசபாளையத்தில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராசபாளையம் முதுகுடி பகுதியை சார்ந்தவர் ராஜாலிங்கம் (வயது 47). இவர் புதிய தமிழகம் கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் ஆவார். இவர் தினமும் அதிகாலை நேரத்தில் வயலுக்கு சென்று விவசாய பணிகளை கவனிப்பது வழக்கம். 

நேற்று முன்தினம் காலையும் வழக்கம்போல தண்ணீர் பாய்ச்ச சென்ற நிலையில், ராஜாலிங்கத்தை வழிமறித்த கும்பலொன்று கொலை செய்ய முயற்சி செய்தது. ராஜாலிங்கமும் தப்பி செல்ல முயற்சித்த நிலையில், 10 க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிய கும்பல் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றது. 

இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு இராசபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கவே, அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அவரை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேற்கொண்ட விசாரணையில் பழிக்கு பழியாக இக்கொலை முயற்சி அரங்கேறியது உறுதி செய்யப்பட்டது. 

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக முதுகுடி பகுதியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழக கொடி ஏற்றப்பட்ட நிலையில், இந்த விஷயத்திற்கு ராஜாலிங்கம் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இருதரப்பிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. 

இந்த மோதலில் தேசிங்கபுரம் நாட்டாமை தங்கவேல் என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய புதிய தமிழகம் கட்சியை சார்ந்த இரண்டு பேரை தங்கவேலன் மகன்கள் சரமாரியாக வெட்டினர். இந்த சம்பவத்தில் அவர்கள் இருவரும் தப்பிய நிலையில், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

தற்போது ஜாமினில் வெளியான தங்கவேலின் மகன்கள் ராஜாலிங்கத்தை கொலை செய்ய முயற்சித்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தங்கவேலின் மகன்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். ராஜாலிங்கத்தின் உறவினர்களும் திடீர் மறியலில் ஈடுபட்டதால், இராசபாளையம் - திருநெல்வேலி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராசபாளையம் புதிய தமிழகம் கட்சியை சார்ந்தவர்கள், ராஜலிங்கத்தின் கொலை வழக்கில் குற்றவாளிகளாக கருத்தப்பட்டுள்ள நபர்களை கைது செய்ய கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் பகுதியில் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து, பாதுகாப்பு கருதி காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சம்பவ இடத்திற்கு இராசபாளையம் காவல் கண்காணிப்பாளர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி மக்களை கலைந்து செல்ல வைத்தார். இதனை மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை பகுதியியல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajapalayam PTK Party Member Murder People Protest


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->