ரெயில்களில் மறந்தும் இதை மட்டும் செய்யாதீர் - ரெயில்வே நிர்வாகம் அதிரடி உத்தரவு.!
railway department order not allowed quickly fire things in trains
ரெயில்களில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை எடுத்துச் சென்றால் சிறை தண்டனை வழங்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:-

தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சிறப்பு ரெயில்களில் பக்தர்கள் சிலர், விளக்கு மற்றும் கற்பூரம் ஏற்றி வழிபடுவதாக தகவல் வந்துள்ளது. பக்தர்கள் எளிதில் தீ பற்றக்கூடிய பட்டாசுகள், கியாஸ் சிலிண்டர், அமிலம், பெட்ரோல் மற்றும் மண்எண்ணெய் போன்றவற்றை ரெயில்களில் எடுத்துச் செல்லக்கூடாது. மீறியும் தீப்பற்றக் கூடிய பொருட்களை பயன்படுத்தினால் தண்டிக்கப்படுவர்.
அதாவது, ரெயில்வே சட்டப்படி, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். ரெயில்களில் கற்பூரம் மற்றும் விளக்குகள் ஏற்றினால், சக பயணிகள் உடனடியாக டிக்கெட் பரிசோதகர், ரெயில் பெட்டி உதவியாளர்கள், ரெயில் நிலைய மேலாளர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் தகவல் தெரிவிக்கலாம். மேலும் `139' என்ற உதவி எண்ணிலும் தகவல் சொல்லலாம்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
railway department order not allowed quickly fire things in trains