எளிதாக கொரோனாவை தடுக்க, இதை மட்டும் செய்தால் போதும்.. சுகாதாரத்துறை செயலாளர்.!  - Seithipunal
Seithipunal


சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து இருக்கின்றார். 

சென்னை கிண்டி பகுதியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னையில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் 1124 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். 

4368 படுக்கைகள் தயாராக இருக்கின்ற நிலையில் இருப்பதாகவும், போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். 

தேர்தல் பிரசாரங்கள் போது அனைத்து பொதுமக்கள் முகக்கவசம் அணிவதையும் பாதுகாப்பு இடைவெளியை பின்பற்றுவதை அரசியல் கட்சியினர் உறுதி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருக்கின்றார். முகக்கவசம் அணிவதன் மூலமாக எளிதான முறையில் கொரோனா பரவலை தடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

radhakrishnan says wear mask


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal