ஆயுத பூஜையில் பூசணிக்காய், தேங்காய் உடைப்பவர்கள் கவனத்திற்கு..  காவல்துறை எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஆயுத பூஜையும் ஒன்று. ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வாகனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு பூஜைகள் செய்து பூசணிக்காய் மற்றும் தேங்காயை உடைப்பது வழக்கம்.

இதில் நிறைய பேர் சாலைகளின் நடுவே பூசணிக்காயை உடைத்து விட்டு அப்படியே விட்டுவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து அதிகப்படியான விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இது போன்ற விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க காவல்துறையும் அவ்வப்போது தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், பொதுமக்கள் சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் பூசணிக்காய் மற்றும் தேங்காய்களை உடைக்க வேண்டாம் என்றும் மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. மேலும், பாதுகாப்பான முறையில் தங்கள் பூஜைகளை செய்ய வேண்டும் என சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Punkin and coconut not break in road side


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->