குப்பை அள்ளும் வாகனத்தை அலட்சியமாக இயக்கம் 14 வயது சிறுவன்.. புதுக்கோட்டையில் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுகள் உள்ள நிலையில், தினமும் 216 நிரந்தர துப்புரவு பணியாளர்களும், 200 ஒப்பந்த துப்புரவு பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த 2018 ஆம் வருடத்தில் 10 குப்பை அள்ளுமாம் பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த 2019 ஆம் வருடத்தில் 54 வாகனமும் என மொத்தமாக 64 வாகனங்கள் உள்ளது. இதன் மூலமாக தினமும் ஒவ்வொரு வார்டுக்கு சென்று குப்பையை சேகரித்து அகற்றி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், புதுக்கோட்டை மெச்சுவாடி பகுதியை சார்ந்த துப்புரவு பணியாளர் பீட்டர் என்பவருக்கு மூன்று குப்பை அள்ளும் பேட்டரி வாகனம் தரப்பட்டுள்ளது. 

இந்த வாகனத்தை 13 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் பாதுகாப்பற்ற முறையில் இயக்கி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனத்தை பிற நபர்கள்  இயக்க கூடாது என்று அறிவுறுத்திய நிலையில், அந்த சிறுவன் தனது மாமா நகராட்சியில் பணியாற்றி வருவதாகவும், அவருக்கு தேவையான சாக்குப்பையை வாங்க வாகனத்தை எடுத்து வந்ததாகவும் கூறியுள்ளான். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai Municipality Garbage vehicle drive by 14 year old boy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->