கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த திமுக தலைமை.. முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


புதுவை மாநில திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதுவையில் மரப்பாலத்தில் உள்ள தனியார் அரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் புதுவை மாநில அமைப்பாளர் எம்எல்ஏ சிவா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, புதுவை காங்கிரஸ் ஆட்சியில் நமது சுயமரியாதையும், தன்மானமும் அடகு வைக்கப்பட்டது. இந்த ஆட்சியால் கூட்டணி கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் கூட எந்த பயனும் இல்லை. 

துணைநிலை ஆளுநரை குறை கூறி காலம் கடத்தும் அரசு ஆக உள்ளது. வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. சட்டப்பேரவை துணைத் தலைவரை அரசையும், அமைச்சர்களை விமர்சிக்கிறார். பெரும்பான்மை இல்லாத நிலையில் சட்டப்பேரவை கூட்டப்பட்டது. புதுவையில் திமுக தலைமையில் ஆட்சி மலரும். முதல்வராக ஜெகத்ரட்சகன் பதவி ஏற்பார். புதுவையை நாங்கள் மாற்றிக் காட்டுவோம் என கூறினர். 

அதன் பிறகு கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், எம்பியுமான ஜெகத்ரட்சகன் பேசினார். திமுக தலைமையில் ஏற்கனவே ஆட்சி அமைந்த மண் புதுவை. இந்த மண்ணில் மீண்டும் திமுக தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும். இங்கு உள்ள அனைவரின் உணர்வுகளையும் முக ஸ்டாலினிடம் சொல்லுவேன். புதுவையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் பல குடும்பங்கள் வீதிக்கு வந்து விட்டது. 

புதுவையில் வருவாயை பெருக்க நான் பல திட்டங்களை வைத்துள்ளேன். புதுவை எனது தாய்மண். இந்த மாநிலத்தை சொர்க்கமாக மாற்ற வேண்டும் என்பது எனது ஆசை. புதுவையில் யாருடன் கூட்டணி என்பது குறித்து மு க ஸ்டாலின் முடிவெடுப்பார். என்னிடம் தேர்தல் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். இதை சிறந்த முறையில் செய்வேன். 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றால் தான் இங்கு மீண்டும் வருவேன். இல்லாவிட்டால் மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன் என தெரிவித்துள்ளார். புதுவை மாநில திமுக முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன் என மாநில திமுக அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puducherry dmk cm candidate


கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,Advertisement

கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,
Seithipunal