கடைசி நேரத்தில் திமுகவிற்கு முக்காடு போட்டுவிட்ட காங்கிரஸ்! இன்ப அதிர்ச்சியில் அதிமுக! புதுக்கோட்டையில் நடந்தது என்ன?!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற மாவட்ட ஒன்றிய ஊராட்சி உறுப்பினர்களுக்கு இடையே நடைபெறும் மறைமுக தேர்தலானது இன்று 27 மாவட்டங்களிலும் நடைபெற்றது. இதில் பல இடங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடைபெற்ற வரை வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

மாவட்ட சேர்மன் மற்றும் மாவட்ட துணைச் சேர்மன் பதவிகளில் 27 மாவட்டங்களில் 26 மாவட்டங்கள் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மாவட்ட சேர்மன் பதவியில் 14 அதிமுக கூட்டணியில் 12 திமுக கூட்டணி வெற்றி பெற்றிருந்த நிலையில், மாவட்ட துணைச் சேர்மன் பதிமூன்று அதிமுக 13 திமுக அணி என சமமாக வந்திருந்தது. மாவட்ட சேர்மன் இரண்டு அதிகமாக பெற்றிருந்த நிலையில் மாவட்ட துணைச் சேர்மன் இல் சமமாக வந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. அதற்கான பின்னணி காரணத்தை விசாரித்த போது அதிமுக கூட்டணியின் ஆதரவுடன் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாவட்ட துணைச் சேர்மன் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது. 

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தலைவருக்கான தேர்தலில் மொத்தம் 22 உறுப்பினர்களைக் கொண்ட அந்த மாவட்டத்தில் 13 இடங்களை திமுகவும் ஒன்பது இடங்களை அதிமுகவும் கைப்பற்றியிருந்தனர். அதில் அதிகப்படியான இடங்களை திமுகவை பெற்றிருந்ததால் எளிதாக மாவட்ட சேர்மன் மற்றும் மாவட்ட துணைச் சேர்மன் பதவிகளை திமுக அணியை கைப்பற்றும் என எதிர்பார்த்திருந்த நிலையில், யாரும் எதிர்பாராத வண்ணமாக அதிமுக வேட்பாளர் புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன் பின்னணியில் திமுக அணியில் இருந்த இரண்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் அதிமுக அணிக்கு ஆதரவளித்து வாக்களித்தது பின்னர் தெரியவந்தது. இதனை அடுத்து எளிதாக வெற்றி பெறவேண்டிய திமுக அதிமுகவிடம் தோல்வியடைந்து மாவட்ட சேர்மன் பொறுப்பை பறிகொடுத்தது. அதேபோல அதிமுகவில் சாத்தியமில்லாத வெற்றியை பரிசாக கொடுத்த காங்கிரசுக்கு நன்றி கடன் அளிக்கும் விதமாக மாவட்ட துணைச் சேர்மன் பதவியை திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக உறுப்பினர்கள் ஆதரவுடன் அதிமுக அளித்தது குறிப்பிடத்தக்கது. 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என நேற்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே எஸ் அழகிரி அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில், அதிமுக அணியில் ஒரு மாவட்ட துணைச் சேர்மன் பதவியை பெற்றுக்கொண்டு, திமுகவிற்கு கிடைக்க வேண்டிய ஒரு மாவட்ட சேர்மன் பதவியை அதிமுகவிற்கு காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pudhukottai political crisis


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->