ஊழல் பெருச்சாளி! ஊரை அடித்து உலையில போட்டாலும் கேள்வி கேட்க கூடாது என்ற திமுகவின் ஆணவம் - ஷியாம் கிருஷ்ணசாமி!  - Seithipunal
Seithipunal


பண மோசடி வழக்கில் அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டுள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமைச்சரவைகளிலிருந்து நீக்குவதாக தமிழக ஆளுநர் ரவி அவர்கள் நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்.

பின்னர் அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு ஆளுநர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம், ஆளுநரின் இந்த உத்தரவு குறித்தும் அரசியல் பிரமுகர்கள் காரசாரமான விவாதங்களையும், கருத்துக்களையும் முன்வைத்து வருகின்றனர்.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பாஜக மற்றும் பாஜகவின் ஆதரவு நிலையில் உள்ள கட்சிகள் ஆளுநர் செய்தது சரியானது தான் என்று தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், புதிய தமிழகம் கட்சியின் ஷியாம் கிருஷ்ணசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் அந்த பதிவில், 

"பொய்யும் புரட்டும் பேசி,
பணத்தை வாரி இறைத்து மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்துவிட்டால்,

ஊரை அடித்து உலையில போட்டாலும் ஐந்து வருடம் எவரும் கேட்க கூடாது என்ற திமுகவின் ஆணவம் தான் ஜனநாயக படுகொலையே தவிர ஆளுநர் ஒரு ஊழல் பெருச்சாளியை அமைச்சரவையிலிருந்து நீக்கியது அல்ல" என்று ஷியாம்  கிருஷ்ணசாமி தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

முன்னதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் தெரிவிக்கையில், ஆளுநர் அவர்கள் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கியது சரியானதுதான். நீதி, நியாயம் நிலை நாட்டப்பட மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் ஆளுநர் அவர்களின் இந்த முடிவு உள்ளதாக, ஜி கே வாசன் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

இதேபோல் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவிக்கையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்து, அவரின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்த மு.க ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி இது.

இதனை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தான் முதலில் கொண்டாட வேண்டும். செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PT Shyam say about MInister Senthilbalaji and DMK june 30


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->