தனியார் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு! - Seithipunal
Seithipunal


தென்காசி, ஆலங்குளத்தில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியாக 2 தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆலங்குளத்தில் இருந்து நேற்று மதியம் சென்ற ஒரு பேருந்தில் பெண் ஒருவர் ஏறிவிட்டு அகரம் வழியாக செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார். 

ஆனால் இந்த பேருந்து அந்த வழியாக செல்லாது என பேருந்து நடத்துனர் தெரிவித்ததுடன் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

உடனடியாக பேருந்து பயணிகள் சமாதானம் செய்து இரண்டு பேரையும் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மாலை அதே பேருந்து சங்கரன்கோவிலுக்கு சென்ற போது 2 இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்து அரிவாள் காட்டி பயணிகளை மிரட்டி தப்பி சென்றனர். 

அப்போது எதிரே வந்த மற்றொரு தனியார் பேருந்தின் கண்ணாடிகளையும் உடைத்து விட்டு அந்த கும்பல் தப்பித்து சென்றது. 

இதில் பேருந்து நடத்துனர் மகேஷ்குமார் (வயது 37) என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம கும்பலை தேடி வருகின்றனர். 

இதற்கு முன்னதாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் தனது கூட்டாளிகளுடன் வந்து பேருந்துகளின் கண்ணாடியை உடைத்து இருக்கலாம் என போலீசார் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

2 தனியார் பேருந்துகளின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

private buses windows Breaking Police investigation


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->