காங்கிரஸ் - திமுகவுக்கு இனி அவ்வுளவுதான் - பிரதமர் மோடி உச்சகட்ட எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக - பாமக - பாஜக - த.மா.க உட்பட பல கட்சிகள் இணைத்து தேசிய ஜனநாயக கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கூட்டணிக்கட்சி தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டணி வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சார கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, " காங்கிரஸ் - திமுகவின் ஊழல் இனியும் தொடர முடியாது. கடந்த காலங்களில் தொழிலதிபர்களை மிரட்டி பணம் சம்பாரித்தார்கள். ஆட்சியில் இருக்கையில் ஏற்படுத்தப்பட்ட மின்வெட்டு பிரச்சனையால் பல தொழில் நிறுவனங்கள் முடங்கியது.

திருக்குறளில் விவசாயத்திற்கு மிகப்பெரிய மதிப்பளிக்கிறது. விவசாயி தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள், அவர்கள் நவீனமயத்திற்கு மாறவேண்டிய சூழல் இருக்கிறது. சிறுவிவசாயிகளை இடைத்தரகர்களிடம் இருந்து காப்பாற்ற பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தரகர்களை ஒழித்துவிட்டால் விவசாயிகளின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். மீனவர்களுக்கும் பல்வேறு நலன் சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தேர்தல் அறிக்கையை பாருங்கள். தமிழக மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை தெரிவித்து இருக்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணி உங்களது வளர்ச்சிக்காகவும், உங்களது குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சிக்காகவும் பல திட்டங்களை செயல்படுத்த ஆவலாக இருக்கிறோம் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime Minister Warn DMK and Congress about Corruption 30 March 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->