குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று தமிழகம் வருகை.. போலீஸ் பலத்த பாதுகாப்பு.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று மாலை 3.30 மணிக்கு வருகை தருகிறார். அதன்படி அவர் டெல்லியில் இருந்து இன்று காலை 11:30 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூருக்கு வருகிறார். அதன் பின்னர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் முதுமலை அருகே உள்ள மசினகுடி ஹெலிபேட்டில் வந்து இறங்குகிறார்.

அங்கிருந்து காரில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு செல்கிறார். அங்கு ஆதிவாசி மக்கள் மற்றும் பாகன்களை சந்திக்கிறார். அதன் பின்னர் 'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' என்ற ஆவணப்படுத்தில் நடித்த பாகன் தம்பதி கொம்பன்-பெள்ளி தம்பதியினரை சந்தித்து விட்டு மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்படுகிறார்.

குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி மசினகுடி ஹெலிபேட், தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம், காரில் செல்லும் வழிகளில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அனைத்து விடுதிகளிலும் சுற்றுலா பயணிகளை தங்க அனுமதிக்க கூடாது என்று விடுதி உரிமையாளர்களுக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், கோவை உட்பட தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இருந்து 900 போலீசார் முதுமலைக்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

President Draupadi Murmu comes to TamilNadu today


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->