#BREAKING || சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகள் நியமனம்.. குடியரசு தலைவர் உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட பின்னர் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். அதன்படி கடந்த மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு  புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 4 கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் கொடுக்கப்பட்ட கொலீஜியம் பரிந்துரையை ஏற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் பணியாற்றி வந்த ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

President appointed additional judges to ChennaiHC


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->