அடம்பிடித்த பிரேமலதா.. கொரோனா பரிசோதனைக்கு ஒருவழியாக ஒத்துழைப்பு.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இதற்கு பரிசோதனை என்று செய்யப்பட்டது. கடந்த மார்ச் 18ஆம் தேதி பிரேமலதா வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து, அவருடைய சகோதரர் சுதீஷ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எனவே பிரேமலதா மற்றும் சுதீஷ் உடன் நெருக்கமாக இருந்தவர்களுக்கு தொற்று இருக்கலாம் என்று சுகாதாரத் துறையினர் அச்சம் தெரிவித்து பிரேமலதாவை பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். 

ஆனாலும், அவர் பரிசோதனை செய்து கொள்ளாமல் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் விருத்தாசலம் நகர பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பொழுது வருகை புரிந்த விருதாச்சலம் சுகாதாரத் துறை ஆய்வாளர் பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள முதலில் மறுப்பு தெரிவித்த பிரேமலதா பின்னர் பரிசோதனை செய்து கொண்டார். 

இதனைத் தொடர்ந்து அவர் தங்கியிருக்கும் தனியார் பள்ளி வளாகத்திற்கு சென்ற சுகாதாரத் துறையினர் தேதிமுக பொருளாளர் பிரேமலதாவின் பரிசோதனை மாதிரிகளை சேகரித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Premaladha accept corona test 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->