நோபல் புத்தகத்தில் இடம் பெற்ற கர்ப்பிணி பெண்ணின் சாதனை! - Seithipunal
Seithipunal


சென்னை சைதாப்பேட்டை சின்னமலை பகுதியைச் சேர்ந்தவர் சுதா (வயது 36) இவர் யோகா பயிற்சியாளராக உள்ளார். தற்போது இவர் 9 மாத கர்ப்பிணி ஆவார். 

யோகா கற்றுக் கொண்ட போது, சிறு வயது முதலே சிலம்பம் மீது பற்று கொண்டதால், அதில் அவர் சாதிக்க விரும்பினார். நேற்று தேனாம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிறைமாத கர்ப்பிணியான சுதா காலை 9:45 மணி முதல் 10:45 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி அசத்தினார். 

இவரது இந்த சாதனையானது நோபல் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இது குறித்து சுதா தெரிவிக்கையில், ''கடந்த மூன்று ஆண்டுகளாக நான் சிலம்பம் கற்றுக் கொண்டேன்.  

எனக்கு அடுத்த மாதம் 17 பிரசவத்திற்கு தேதி கொடுத்துள்ளனர். நிறைமாத கர்ப்பத்துடன் நான் சிலம்பம் சுற்றி சாதனை செய்ய வேண்டும் என விரும்பினேன். 

இதற்கு பயிற்சியாளரும் எனது கணவர் வல்லபன் இருவரும் உறுதுணையாக இருந்தனர். இதனை அடுத்து ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, சுற்றுவால், மான் கொம்பு ஆகியவற்றை தொடர்ந்து ஒரு மணி நேரம் சுற்றினேன். 

இந்த சாதனை நோபல் புத்தகத்தில் இடம் பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது'' என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pregnant woman achievement in the Nobel book


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->