"WE STAND WITH THALAPATHY VIJAY" - விழுப்புரத்தில் பரபரப்பை கிளப்பிய சுவரொட்டிகள்.!! - Seithipunal
Seithipunal


கரூர் அருகே வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், கடந்த மாதம் 27-ந் தேதி பிரசாரம் செய்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், விழுப்புரம் நகரின் பல்வேறு இடங்களில், தமிழக வெற்றிக்கழகத்தினர் வாசகங்களுடன் கூடிய சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

அந்த சுவரொட்டியில், கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கு ஆழ்ந்த இரங்கல், தளபதியை காப்போம்! தமிழகத்தை மீட்போம்! எவ்வளவு வலிகள் தந்தாலும் நாங்கள் வழி மாற மாட்டோம்! என்று விஜய்க்கு ஆதரவாக ஒட்டியுள்ளனர்.

இந்த சுவரொட்டி நகர் முழுவதும் பல இடங்களிலும் ஒட்டப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக தவெக தலைவர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி கரூர் மற்றும் திருச்சியில் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு மாணவர் சங்கம் என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

posters paste support tvk leader vijay in vilupuram


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->