பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு சலுகை.. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் ஆணையர்.!! - Seithipunal
Seithipunal


கடந்த 2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், திருநாவுக்கரசு, சபரிநாதன், வசந்த் குமார், மணிவண்ணன், சுரேஷ் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். 

இவர்கள் ஐந்து பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பிறகு இந்த வழக்கு விசாரணையானது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு பொள்ளாச்சியை சேர்ந்த அருளானந்தம், ஹேரேன் பால், பாபு அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் வசந்தகுமார், திருநாவுக்கரசு, மணிவண்ணன், சுரேஷ், சபரி ராஜன் ஆகியோர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், ஐந்து பேரும் கடந்த 20ம் தேதி கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு சேலம் திரும்பினர். வரும் வழியில் விதிகளை மீறி குற்றவாளிகளை அவர்கள்  உறவினர்களை சந்திக்க அனுமதித்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியது. 

தொடர்பாக சேலம் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், காவலர்கள் பிரபு , வேல்குமார், ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ்குமார், கார்த்தி ஆகிய 7 பேரை சஸ்பெண்ட் செய்து சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோதா உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுகுறித்து துறை ரீதியாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pollachi sexual harassment case 7 police suspended


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->