நடிகையால் ஒவ்வொரு இரவும் அவஸ்தைப்படும் அரசியல் பிரமுகர்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் அந்தியூர் அண்ணாமடுவை சேர்ந்த குருநாதன் என்பவர் சமத்துவ மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளராக இருக்கின்றார். சமீபகாலமாக இவருக்கு செல்போன் தொல்லை ஏற்பட்டு இருக்கின்றது. 

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிக்கும் நடிகையின் பெயரில் முகநூலில் போலி கணக்கு ஒன்றை உருவாக்கி, அதில் குருநாதனின் செல்போன் எண்ணை இணைத்து இருக்கின்றனர். இதன் காரணமாக அந்த பக்கத்தை தொடரும் பலரும் அந்த நடிகை தான் என நினைத்து இரவு நேரங்களில் குருநாதரை தொடர்பு கொண்டு தொல்லை செய்துவருகின்றனர். 

மேலும், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, உங்களை நேரில் பாக்கணும் என்று காதல் சொட்டு சொட்டா பேசுகின்றனர். மேலும், சிலர் தகாத வார்த்தைகளைக் கொண்டும் பேசி மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர். எனவே, இரவு நேரங்களில் என்னுடைய செல் போனுக்கு வரும் அழைப்புகளை ஏற்கவே மிகவும் பயமாக இருக்கிறது. என்று குருநாதன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் அந்தியூர் காவல் நிலையத்தில் ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் அந்த போலி முகநூல் கணக்கை முடக்கியது செல்போனை நீக்க வேண்டும் என்று புகார் அளித்திருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

politician got issue by actress


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal