மூன்றாம் பாலினத்தவருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கான கொள்கையை உருவாக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


மூன்றாம் பாலினத்தவர் என்பதற்காக ஏர் இந்தியா விமான நிறுவனத்தில், தனக்கு விமான பணியாளருக்கான வேலை மறுக்கப்பட்டது என தெரிவித்து, ஷானவி பொன்னுசாமி என்ற திருநங்கை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. 

இந்த வழக்கை நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் ஹிமா கோலி தலைமையிலான அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்து கொண்டது. இந்த விசாரணையில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க உதவும் வகையில் ஒரு கொள்கையை உருவாக்குவதற்காக அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்து ஆலோசிக்கும்படி  நீதிபதிகள் மத்திய அரசை கேட்டு கொண்டனர். 

இந்த வழக்கு குறித்து கோர்ட்டு தெரிவித்ததாவது, ஒவ்வொரு நிறுவனமும் சட்ட பிரிவுகளின் கீழ் செயல்பட வேண்டியது அவசியம். மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு சட்டம், 2019-ன்படி அனைத்து நிறுவனங்களிலும் அவர்களுக்கு முறையான வேலைவாய்ப்பு வழங்குவதற்கான கொள்கையை உருவாக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசை கேட்டு கொண்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

policy made provide employment third gender


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->