பரபரப்பு! கோவில் அருகே மண்டை ஓடு, எலும்பு துண்டுகள்! நரபலியா? போலீஸ் விசாரணை! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் கோவில் குளத்தில் கிடந்த மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகள் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் வைப்பூர் அருகே சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு என்று தனியாக பெரியகுளம் உள்ளது. நேற்று இரவு அவ்வழியாக பொதுமக்கள் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகள் கிடப்பதை பார்த்து மக்கள் அதிர்ச்சி அதிர்ச்சியடைந்தாக கூறப்படுகிறது.

உடனடியாக ஊர்மக்கள் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கண்ணனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் இது குறித்து வைப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலின் பேரில் அங்கு சென்ற வைப்பூர் போலீசார் அருகில் கிடந்த அடையாளம் தெரியாத மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகளை சேகரித்து பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில்களில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகள் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police investigation into human skull and bone fragments found in temple pond


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->