#தமிழகம் | ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோகிணி.! காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவு.!  - Seithipunal
Seithipunal


சென்னை தியாகராய நகரில் உள்ள நகைக்கடைக்கு கடந்த 10-ம் தேதி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் இருவர் வந்து கடை மேலாளர் சிவக்குமாரிடம், நகை திருட்டு வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட சில நகைகள் உங்கள் கடையில் வாங்கியது. எனவே விசாரணைக்காக காவல் நிலையம் வரவேண்டும் எனக் கூறியுள்ளனர்.

இதனை அடுத்து சிவக்குமார் காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போது  அங்கிருந்த காவல் ஆய்வாளர் ரோகிணி, எஃப்ஐஆரில் உங்கள் கடை பெயரை சேர்க்காமல் இருக்க உங்கள் கடைக்கு வந்த இரு காவலர்கள் சொல்வது போல செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதன்படி காவலர்கள் ஆய்வாளருக்கு 1.5 லட்சமும், எங்களுக்கு 50 ஆயிரமும் என மொத்தம் 2 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.

இது குறித்து சிவக்குமார் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் காவலர்கள் இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து இன்று குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரோகிணியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜூவால் உத்தரவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police inspector rohini case


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->