பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு! கேஎஸ் அழகிரி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் 650 மீது வழக்கு! - Seithipunal
Seithipunal


கேஎஸ் அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் 600 நபர்கள் மீதும், திமுக கூட்டணி கட்சி மற்றும் மே 17 இயக்கத்தை சேர்ந்தவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பிரதமர் மோடியின் நேற்றைய சென்னை வருகையொட்டி எதிர்ப்பு தெரிவிப்பதற்காக காங்கிரஸ் கட்சியினர் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப் பெருந்தகை உள்ளிட்ட 600 நபர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல், திமுக கூட்டணி கட்சி, மே 17 இயக்கத்தை சேர்ந்தவர்களும் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் செய்த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த சுமார் 650 பேர் மீது,  நுங்கம்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இதில், சட்டவிரோதமாக கூடுதல்  உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் கேஎஸ் அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் 600 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police Case file Against DMK Alliance Party members


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->