கவிஞர் த.பழமலய்க்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! - Seithipunal
Seithipunal


உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ்ப்பட்டறை இலக்கியப் பட்டறை இணைந்து நடத்தும் பன்னாட்டுத் தமிழ் மாநாடு ஆனது, சென்னை தரமணியில் நடைபெற்றது.  இந்த மாநாட்டில் வாழ்நாள் சாதனையாளர் விருதை மக்கள் கவிஞர் த.பழமலய் பெற்றார். விருதினை தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வழங்கினார்.

விழாவில் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மருத்துவர்.இராமதாஸ் அவர்கள் டுவிட்டரில் த.பழமலய் அய்யாவைப்பற்றி பதிவிட்ட்டதால் உடனே அவரைப்பற்றி அறிந்து அவரின் நூலை வாசித்தேன். அப்பப்பா எவ்வளவு பெரிய படைப்பாளி சத்தமே இல்லாமல் விழுப்புரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. நூறாண்டை கடந்து வாழ வேண்டும்.என்று புகழாரம் சூட்டினார்.! 

முன்னதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்த வாழ்த்து செய்தியில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - தமிழ்ப் பட்டறை இணைந்து சென்னையில் நாளை மறுநாள் நடத்தும் பன்னாட்டுத் தமிழ் மாநாட்டில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் பேராசிரியர் கவிஞர் த.பழமலய் அவர்களுக்கு வாழ்த்துகள். மேலும் பல விருதுகளை குவித்து சாதனை படைக்க வாழ்த்துகிறேன்!" என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Poet T Pazhamalai got life achievement award


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->