போலியான தகவலால் மனவேதனை.. உண்மை இதுதான்..! மயிலம் தொகுதி பாமக எம்.எல்.ஏ விளக்கம்.! - Seithipunal
Seithipunal


மயிலம் தொகுதியின் பாமக சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், " நான்‌ பாட்டாளி மக்கள்‌ கட்சியில்‌ மாநில துணைப்பொதுசெயலாளராகவும்‌, தமிழகத்தில்‌ தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்‌ அஇஅதிமுக கட்சியுடன்‌, பாட்டாளி மக்கள்‌ கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து போட்டியிட்டது. நான்‌ விழுப்பரம்‌ மாவட்டம்‌ மயிலம்‌ சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்று மயிலம்‌ சட்ட மன்ற உறுப்பினராக மக்கள்‌ பணி செய்து வருகிறேன்‌. 

நான்‌ மருத்துவர்‌ அய்யாவின்‌ தீவிர தொண்டனாக இருந்து கட்சிப்பணி செய்வதால்‌ தற்போது மயிலம்‌ சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்‌. கூட்டணி கட்சியின்‌ அதிமுக முன்னாள்‌ அமைச்சர்‌ திரு.சி.வி.சண்முகம்‌ அவர்கள்‌ மருத்துவ சிகிச்சையில்‌ இருந்த காரணத்தினால்‌ என்னால்‌ சந்திக்க இயலவில்லை. தற்போது அவரை நான்‌ மரியாதை நிமித்தமாக முன்னாள்‌ அமைச்சர்‌ திரு.சி.வி.சண்முகம்‌ அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றதை தற்போது சமுக வலைதளங்களிலும்‌ முகநூல்‌ பக்கத்திலும்‌ என்னை பற்றி தவறாக பதிவு செய்து அவதூறு பரப்பி வருகிறார்கள்‌.

மேலும்‌ கடந்த 09/06/2021 அன்று தினகரன்‌ செய்தித்தாளிலும்‌, 11/06/2021 இன்று தினமலர்‌ செய்தித்தாளிலும்‌ அவதூறு செய்தியை வெளியிட்டுள்ளனர்‌. மேற்படி எனக்கும்‌, பாட்டாளி மக்கள்‌ கட்சிக்கும்‌ மிகுந்த அவப்பெயரையும்‌, அவதூறையும்‌ ஏற்படுத்திள்ளதால்‌ எனக்கு நிறைய நபர்கள்‌ தொலைபேசி மூலம்‌ தொடர்பு கொண்டு பேசுவதால்‌ எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி செய்தித்தாளில்‌ வெளியி நான்‌ முற்றிலும்‌ மறுக்கிறேன்‌. தங்களின்‌ செய்தி, பத்திரிக்கை மறுப்பு செய்தி வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Mailam MLA Sivakumar Warn Fake News Media About Former Minister CV Shanmugam Issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->