மூடு.. மூடு.. மதுக்கடைகளை மூடு..! காப்பாற்று.. காப்பாற்று.. தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்று - மருத்துவர் இராமதாஸ்.!! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில்  4 பேர் உயிரிழந்த துயரத்திற்கு, மருத்துவர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், " திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் இன்று காலை அடுத்தடுத்து 4 கொரோனா நோயாளிகள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.  இந்த உயிரிழப்புகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை தான் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது. மிகவும் நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசு கூடுதல் வேகத்தில் செயல்பட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து மக்களைக் காப்பாற்ற முழு ஊரடங்கை கடுமையாக நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. அதனால் உடனடியாக முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும்; ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5000 வழங்க வேண்டும். 

மூடு... மூடு... மூடு... தமிழ்நாட்டில்  மதுக்கடைகளை மூடு. காப்பாற்று..... காப்பாற்று..... காப்பாற்று..... கொரோனா தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்று! " என்று தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Dr Ramadoss Regret to Tirupattur Hospital Corona Patients Died 6 May 2021


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->