திமுக என்றால் பணநாயகம்.. அதிமுக கூட்டணியில் விவசாயிகளுக்கு மதிப்பு - மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


திமுகவிடம் ஜனநாயகம் கிடையாது. அங்கு பணநாயகம் மட்டுமே இருக்கிறது என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.கோவிந்தசாமி அவர்களை ஆதரித்து, பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி கடத்தூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

இதன்போது, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசுகையில், " 70 வருடங்களுக்கு பிறகு விவசாயி தமிழக முதல்வராக வந்துள்ளார். மு.க ஸ்டாலின் அரசியல் வியாபாரி. திமுகவிடம் ஜனநாயகம் கிடையாது. அங்கு பணநாயகம் மட்டுமே இருக்கிறது. 

அங்கு பணம் இருந்தால் மட்டுமே வேட்பாளருக்கான வாய்ப்பு கிடைக்கும். இங்கு விவசாயிகளுக்கு மதிப்பு அளிக்கப்படுகிறது. உழைக்கும் வர்க்கத்திற்கும், பாட்டாளிகளுக்கும், ஏழை மக்களுக்கும் வாய்ப்பு வழிக்கப்படும். தமிழகம் முழுவதும் நமக்கான அலை வீசி வருகிறது. 

நாம் அதிமுக தலைமைலயிலான கூட்டணி அமோக வெற்றியடைய வேண்டும். வன்னியர்கள் போல பின்தங்கியுள்ள சமூகத்திற்கும் அவர்களுக்கான உரிமை போராடி பெற்றுத்தரப்படும். அதுவே சமூக நீதி. தர்மபுரி மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம். இதனை முன்னேற்ற வேண்டும். நான் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றுகையில், பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மொரப்பூர் - தர்மபுரி இரயில் திட்டம் பணிகள் நடைபெற்று வருகிறது ' என்று பேசினார்..

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Anbumani Ramadoss Told about DMK Money TN Election Campaign 25 March 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->