தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காக மக்கள் தான் போட்டியிடுகின்றனர் - பிரச்சாரத்தில் அசத்திய பிரதமர்.! - Seithipunal
Seithipunal


தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காக மக்கள் தான் போட்டியிடுகின்றனர் - பிரச்சாரத்தில் அசத்திய பிரதமர்.!

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த வாரம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று பெங்களூரு நகரில் வாகனத்தில் சென்றபடி பிரசாரம் செய்தார். 

அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதிய தோடு, பிரதமர் மோடிக்கு ஆரவாரமான வரவேற்பையும் அளித்தனர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:- "இதுபோன்ற அன்பை இதுவரைக்கும் எங்கேயும் பார்த்ததில்லை. இந்த வரவேற்புக்கு ஈடு இணையில்லை. 

பெங்களூருவில் நான் பார்த்ததை வைத்து நன்றாக ஒன்றை தெரிந்து கொண்டேன். அதாவது, இந்த தேர்தலில் மோடியோ, பாஜக தலைவர்களோ அல்லது நம் வேட்பாளர்களோ போட்டியிடவில்லை. இந்தது தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காக கர்நாடக மக்கள் தான் போட்டியிடுகின்றனர். 

தேர்தல் கட்டுப்பாடு அனைத்தும் மக்கள் கையில் இருப்பதை என்னால் தெளிவாக பார்க்க முடிகிறது. முதல் முறையாக பாகல்கோட் மக்களுக்கு மூன்று லட்சம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சொந்தமாக கான்கிரீட் வீடு பெற்றுள்ளனர்" என்று தெரிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pm modi speach in banglore for karnataga election campaign


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->