நேற்றிரவு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி.. அளித்த வாக்குறுதி.!! - Seithipunal
Seithipunal


வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த 25ஆம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு மரக்காணம்-புதுச்சேரி இடையே கரையை கடந்தது. இந்த புயலால் புதுச்சேரி மிகவும் பாதிக்கப்பட்டது. மேலும் தமிழகத்திலும் பல இடங்களில் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த புயலால் மரங்கள் முறிந்து விழுந்து, வீடுகள் இடிந்து, மேலும் கனமழை காரணமாக பயிர்கள் நீரில் மூழ்கியும் சேதமடைந்தது. 

தாழ்வான பகுதியில் உள்ள மக்களை முன்கூட்டியே முகாம்களில் தங்க வைக்கப்பட்டதால், மிகப்பெரிய உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருந்ததால். உடனடியாக தாழ்வான பகுதியில் இருந்தவரைகளை வெளியேற்றியும், சாலைகளில் விழுந்த மரங்களை  உடனடியாக அப்புறம் படுத்தியும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் தமிழகத்திற்கு பெரிதாக பொருட் சேதமும், உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு 9 மணி அளவில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து உள்ளார். அப்போது, புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi call to tn cm


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->