கோவை | பில்லூர் அணையின் நீர்மட்டம் 80 அடியாக அதிகரிப்பு! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கும் பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடியாக உள்ளது. 

பில்லூர் அணையின் நீர்வரத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள அப்பர்பவானி, அவலாஞ்சி, குந்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அதிகரித்து வருகிறது. 

இன்று காலை 6 மணியளவில் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக இருந்த நேரத்தில் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. 

அது போல் பில்லூர் அணைப்பகுதியில் 1 மி.மீ மழையும், கெத்தை பகுதியில் 2 மி.மீ, பரளி பகுதியில் 2 மி.மீ,அவலாஞ்சி பகுதியில் 144 மி.மீ மழையும், பதிவாகியுள்ளது. 

பில்லூர் அணையில் தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போதைய அணையின் நீர்மட்டம் 80 அடியில் உள்ளதால், மின் உற்பத்திக்காக வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்படுவதால் பவானி ஆற்றின் இரு கரைகளிலும் தண்ணீர் நிரம்பி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pillur dam 80ft water flow increase


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->