கிராம நிர்வாக அலுவலர்களுக்கு துப்பாக்கி மற்றும் தற்காப்பு பயிற்சி... முதலமைச்சருக்கு மனு.! - Seithipunal
Seithipunal


கிராம நிர்வாக அலுவலர்களின் பாதுகாப்பிற்காக தற்காப்பு பயிற்சி அளித்து அவர்களுக்கு ஒரு துப்பாக்கியும்  பாதுகாப்பிற்காக வழங்க வேண்டும் என  கிராம நிர்வாக அலுவலக சங்கத்தினர் முதலமைச்சரிடம் மனு கொடுத்திருக்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியைச் சார்ந்த கிராம நிர்வாக அதிகாரியான லூர்து பிரான்சிஸ் என்பவர்  கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் எங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் சேலம் மாவட்டத்தில் மானாத்தாள் கிராமத்தைச் சார்ந்த நிர்வாக அலுவலர் வினோத் குமார் என்பவரை கொலை செய்யும் நோக்கத்துடன் சிலர் துரத்தினர்.

இந்த இரண்டு சம்பவங்களால் அதிர்ச்சியடைந்த கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் முதலமைச்சருக்கு புகார் மனு ஒன்றை எழுதியிருக்கின்றனர். அதில் நேர்மையான கிராம நிர்வாக அலுவலர்கள் பயமின்றி பணியாற்ற அவர்களுக்கு தற்காப்பு பயிற்சியளித்து துப்பாக்கியும் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

தங்களது கோரிக்கையை உடனடியாக பரிசீலனை செய்து ஆவணம் செய்யவும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவும். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் வருவாய் துறை அமைச்சர் ஆகியோருக்கு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Petition to Chief Minister for gun and self-defense training for village administrative officers


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->