மதுக்கடை விடுமுறை! கேஸ் கேஸ்சாக மது பாட்டில்களை வாங்கி அமோக விற்பனை! தானாக சிக்கிய முக்கிய புள்ளி! - Seithipunal
Seithipunal


ஜெயங்கொண்டம் பகுதியில் மது பாட்டல்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த உடையார்பாளையம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சில பகுதிகளில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக போலீசருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது.

ரகசிய தகவலை அடிப்படையாகக் கொண்டு போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது சந்தேகம் ஏற்படும் வகையில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ய காவல்துறை முயற்சி செய்தபோது திடீரென அந்த நபர் ஓட தொடங்கியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை விரட்டி சென்று பிடித்து  அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் கள்ளத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

அதனையடுத்து அவர் பதிக்க வைத்திருந்த 120 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் வைத்து சென்று விசாரணை செய்து அவர் நத்தவேளி பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் இளவரசன் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

person who was selling liquor bottles in Jayankondam area was arrested


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->