ரயில் நடைமேடையில் தவறி விழுந்த நபர்.. பாய்ந்து காப்பாற்றிய ரயில்வே பெண் போலீசார்.! - Seithipunal
Seithipunal


சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயிலுக்கும் நடைமுறைக்கும் இடையே நிலைதடுமாறி விழுந்த பயணி ஒருவரை அங்கிருந்த ரயில்வே பெண் போலீசார் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளார்.

நேற்று இரவு 11.30 மணியளவில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி செல்லக்கூடிய ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அப்போது அந்த ரயில் கிளம்பிய போது ரயிலில் இருந்து இறங்க முயன்ற நபர் ஒருவர் நிலைதடுமாறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே உள்ள பகுதியில் எதிர்பாராதவிதமாக விழுந்தார்.

அப்போது அங்கு பணியில் இருந்த ரயில்வே பெண் போலீசார் மாதூரி, துரிதமாக செயல்பட்டு சிக்கிய நபரை ஒற்றைக் கையால் எடுத்து அவரை காப்பாற்றினார். இவரின் இந்த துணிச்சலான நடவடிக்கைகள் ரயில்வே உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

person failed on the train platform female railway policeman saved


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->