சுவரொட்டியால் ஏற்பட்ட பரபரப்பு.. காரணம் என்ன ? - Seithipunal
Seithipunal


நேற்று பெண்கல்விக்கு போராடிய தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், தந்தை பெரியாரின் சிலைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் மரியாதை செலுத்தினர்.

மேலும், பெரியாரின் பிறந்தநாள் விழாவை சமூக நீதி நாளாக தமிழக அரசு அறிவித்ததால், அனைத்து மாவட்டங்களிலும் உறுதி மொழி எடுக்கப்பட்டது. இந்நிலையில் கோவையில் திமுக சார்பில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. 

அந்த சுவரொட்டியில், பெரியார், அண்ணா, கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி, உதயநிதி ஸ்டாலின் புகைப்படங்கள் இடம்பெற்றதுடன் அதில்,  "எங்களை தாண்டி தமிழ்நாட்டை தொட்ரா பார்க்கலாம்" என்ற வாசகமும் உள்ளவாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. 

கோவை பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இந்த சுவரிட்டிகளை பார்க்க முடிந்தது. இந்த போஸ்டர் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

periyaar birthday celebration poster


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->