ஆட்டோவில் ஏன் ஹெல்மெட் போடல? அபராதம் கட்டு.. எஸ்.எம்.எஸ்-ஸால் குழம்பிய இளைஞர்.!  - Seithipunal
Seithipunal


ஆன்லைன் மூலம் அபராதம் செலுத்தக்கூடிய போக்குவரத்து விதிகளினால் பலருக்கும் தற்போது குழப்பம்தான் ஏற்படுகிறது. காரணம் காரில் சென்ற நபர்கள் ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி அபராதம் விதிக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் செல்கின்றன. 

அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அறநாரை கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான லோகேஸ்வரன் என்பவருக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அந்த எஸ்எம்எஸ்-இல் அவர் போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இது பற்றி அவர் ஆன்லைனில் சென்று விபரங்களை தேடிய பொழுது லோகேஸ்வரனின் ஆட்டோ பதிவு என்னுடன் மூன்று சக்கர வாகனத்தில் சென்ற நபர் தலைக்கவசம் அணியவில்லை என்று கூறப்பட்டு அந்த குற்றத்திற்காக அபராதம் 300 ரூபாய் கட்ட வேண்டும் என்று இருந்துள்ளது. 

இதை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆட்டோவில் சென்ற நான் எதற்காக தலைக்கவசம் அணிய வேண்டும் என்று குழம்பி போய் இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

perambalur youngster confused with auto fine


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->