தொடரும் பெற்றோர் போராட்டம்...! சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்ட ஆகாஷ் கொலை வழக்கு...!
Parents protest continues Akash murder case transferred CBCID
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதி ஆகாஷின் மர்ம மரணம், தற்போது தமிழகத்தின் அரசியல் மற்றும் சட்டப் போராட்டக் களமாக மாறியுள்ளது.

"மருத்துவமனையில் ஏற்பட்ட மூச்சுத்திணறலால் உயிரிழந்தார்" என காவல்துறைத் தரப்பு விளக்கம் அளித்தாலும், "ஆகாஷ் காவல்துறையினரின் கொடூரமான சித்திரவதையால்தான் உயிரிழந்தார்" என அவரது பெற்றோர் குற்றம்சாட்டி, உடலை வாங்க மறுத்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்க்கட்சிகள் இதனை 'கஸ்டடி மரணம்' என கடுமையாகச் சாடி வரும் நிலையில், வழக்கில் நிலவும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கவும், வெளிப்படையான விசாரணையை உறுதி செய்யவும் தமிழக டி.ஜி.பி. இந்த வழக்கை அதிரடியாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
இருவரை வெட்ட முயன்ற வழக்கில் கைதான ஒரு இளைஞனின் மரணம்குறித்த பெரும் விவாதமாக உருவெடுத்துள்ளது.
English Summary
Parents protest continues Akash murder case transferred CBCID