30-ஆம் தேதி ஸ்தம்பிக்க போகும் ராமநாதபுரம் - ஓபிஎஸ்ஸின் அறிவிப்பால் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ளது. ஆனால், தலைக் காயங்களுக்கான சிகிச்சை பிரிவு இங்கு ஏற்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக, சுற்றுவட்டார பகுதிகளில் விபத்துகள் ஏற்பட்டு பொதுமக்களுக்கு தலைக்காயம் ஏற்பட்டால், காயமடைந்தவர்களை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கோ அல்லது தனியார் மருத்துவமனைக்கோ அழைத்துச் செல்லக்கூடிய அவல நிலை இருந்து வருகிறது. இதனால், உயிரிழப்புகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

புண்ணிய திருத்தலங்கள் அதிகம் நிறைந்துள்ள இராமநாதபுரம் பகுதியில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் வந்து செல்வதனால், விபத்துகள் அதிகளவில் நடைபெறுகிறது. இதற்காகவே, இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன் கூடிய தலைக் காய சிகிச்சை பிரிவினை ஏற்படுத்த வேண்டியது மிக அவசியமாகிறது. 

இது தொடர்பாக அப்பகுதி மக்களின் சார்பில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டும், அதன்மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன் கூடிய தலைக் காய சிகிச்சை பிரிவினை உடனடியாக அமைக்கவும், 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் அதற்குரிய மருத்துவர்கள் மற்றும் இதர பணியாளர்கள் நியமிக்கப்படவும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசை வலியுறுத்தி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில், 30-08-2024 – வெள்ளிக்கிழமை காலை 10-30 மணியளவில் இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு இராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் ஆர். தர்மர், எம்.பி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ops protest in ramanathapuram coming 30


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->