ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில், ஓபி மதன் மீது குண்டாஸ் பாய்ந்தது.!  - Seithipunal
Seithipunal


அரசினால் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டினை திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து, அதில் விளையாடுகிறேன் என்ற பெயரில் சிறார்களிடம் ஆபாசமாக பேசி, பெண்களை இழிபடுத்தி பேசிய மதன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டான். இவருக்கு துணையாக இருந்த இவரின் மனைவியும் கைது செய்யப்பட்டார்.

மதனின் மீது பல்வேறு தரப்புகளில் இருந்து புகார்கள் எழுந்த காரணத்தினால், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் மதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மதன் கைது செய்யப்பட்டது முதல், மதனிடம் பணம் கொடுத்து எமர்ந்துவிட்டதாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்து குவித்த வண்ணம் உள்ளது. தற்போது வரை சுமார் 100 க்கும் மேற்பட்டோர் மின்னஞ்சல் வழியாக புகார்களை அளித்துள்ளனர்.

இதற்கிடையே மதன் தனக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரணையின் போது காவல்துறை தரப்பில், "பெண்களை துன்புறுத்தியது, பலர் நபர்களிடம் மோசடி குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டியுள்ளது." என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் மதனின் அவர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், மதன் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. இருமுறை ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

op madan in gundas law


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->