#BREAKING || ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்து.!! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு நாள்தோறும் மலை ரயில் இயக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் பலர் நாள்தோறும் இந்த மலை ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி நேற்று இந்த மலை ரயிலில் பயணம் மேற்கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் இன்று குன்னூர் ரயில் நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த மலை ரயிலின் 2 சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியதால் விபத்துக்குள்ளானது.

 இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். தண்டவாளத்தில் இறங்கிய பெட்டியினை சரி செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் இடையேயான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ooty hill train derailment accident


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->